தேனி

வீரபாண்டி, கடமலைக்குண்டு பகுதியில் ஆகஸ்ட் 31-இல் மின்தடை

29th Aug 2019 09:09 AM

ADVERTISEMENT

வீரபாண்டி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை ஆக.31 மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
   எனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை வீரபாண்டி, உப்பார்பட்டி, உப்புக்கோட்டை, பத்திரகாளிபுரம், காமராஜபுரம், டொம்புச்சேரி, மாணிக்காபுரம், சடையால்பட்டி, போடேந்திரபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளர் சொ.லட்சுமி தெரிவித்தார்.
பெரியகுளம்: கடமலைக்குண்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் ச.மாறன்மணி தெரிவித்துள்ளார்.    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரியகுளம் கோட்ட பராமரிப்பிலுள்ள கடமலைக்குண்டு உபமின்நிலையத்தில் மாதாந்திரப் பணிகள் மேற்கொள்வதால் வரும் சனிக்கிழமை (ஆக. 31) கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT