பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் உலக தாய்ப்பால் வாரவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு தேனி மாவட்ட துணை ஆட்சியர் நிறைமதி தலைமை வகித்தார். மாவட்ட திட்ட அலுவலர் ஹெலன் கரீஷ் மற்றும் கல்லூரிச் செயலர் குயின்சிலி ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சேசுராணி தாய்ப்பால் ஒரு வரப்பிரசாதம் என்ற தலைப்பில் பேசினார்.
தேனி மாவட்ட தாய்சேய் நல அலுவலர் பி.சத்யா குழந்தைகள் வளர்ப்பு முறை மற்றும் தாய்ப்பாலின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். விலங்கியல் துறை பேராசிரியர் சாந்தி குழந்தைகள் வளர்ப்புமுறை என்ற தலைப்பில் பேசினார்.
மேலும் தாய்மார்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் ஏராளமானா தாய்மார்கள், கல்லூரி விலங்கியல்துறை, விரிவாக்கப்பணித் திட்டம் மற்றும் நாட்டுநலப்பணித் திட்ட மாணவிகள் பங்கேற்றனர். குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் விஜயா நன்றி கூறினார்.