தேனி

சின்னமனூர் அருகே முன்மாதிரி அங்கன்வாடி மைய வளாகத்தில் காய்கறி தோட்டம் அமைத்து குழந்தைகளுக்கு உணவு வழங்கல்

29th Aug 2019 09:04 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அங்கன்வாடி மைய வளாகத்தில் காய்கறித் தோட்டம் அமைத்து விளைவிக்கப்படும் காய்கறிகளை சமைத்து குழந்தைகளுக்கு உணவு வழங்குவதால் பெற்றோர்கள்மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் அப்பிபட்டி ஊராட்சி விஸ்வநாதபுரத்தில் அங்கன் வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தின் அமைப்பாளர் அனீஸ்பாத்திமா மற்றும் ஊழியர்கள்  குழந்தைகளுக்கு தேவையான சத்தான காய்கறிகளை அங்கன் வாடி மைய வளாகத்திலேயே பயிர் செய்துள்ளனர். அவற்றில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பீட்ரூட் உள்ளிட்ட சத்தான காய்கறிகளை நாள்தோறும் பறித்து உணவு சமைத்து வருகின்றனர். 
      அதோடு   அமைப்பாளர் அனீஸ்பாத்திமா தனது கணவர் மற்றும் சமூக ஆர்வலருமான சிக்கந்தர் பாட்சாவுடன் சேர்ந்து குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படி வசதிகளை செய்து கொடுப்பதோடு குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருள்களையும் வழங்கியுள்ளனர்.
  இது குறித்து குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகையில், விஸ்வநாதபுரம் அங்கன்வாடி மையம் பிற மையங்களுக்கு முன்மாதிரியாக செயல்படுகிறது. இந்த மையத்தில் ஆரம்பத்தில் குழந்தைகள் வருகை இல்லாமல் இருந்தது. தற்போது 15 முதல் 20 குழந்தைகள் வருகின்றனர். அருகேயுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ராஜேஸ்வர் வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கான ஆங்கிலக்கல்வி கற்பித்து வருகிறார் என தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT