போடி அருகே சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட நூலக கட்டடம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
ஏற்கெனவே நூலக கட்டடம் சேதமடைந்து இருந்த நிலையில் அண்மையில் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை தேனி முதன்மை கல்வி அலுவலர் எஸ்.ரேணுகாதேவி தலைமை வகித்து திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். பெரியகுளம் கல்வி மாவட்ட அலுவலர் பி.திருநாவுக்கரசு, தி கிரீன் லைப் பவுண்டேசன் அறக்கட்டளை செயலர் க.மு.சுந்தரம், துணைத் தலைவர் அ.விஸ்வநாதன், செயற்குழு உறுப்பினர்கள் இரா.அய்யப்பன், லி.குமார் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். பின்னர் நூலக வளாகத்தில் 15 மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தலைமை ஆசிரியர் அ.பாக்கியலட்சுமி வரவேற்றார். ஆசிரியர் ஆர்.மணி நன்றி கூறினார்.