தேனி

சர்வதேச ஸ்கேட்டிங்: 2 தங்கம் வென்ற கல்லூரி மாணவருக்கு பாராட்டு

23rd Aug 2019 08:26 AM

ADVERTISEMENT

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் 2 தங்கப்பதக்கங்களை வென்ற  உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
  சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகள், இந்தோனேசியாவில் ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில்  நடைபெற்றது. தமிழகத்திலிருந்து  தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் இரண்டாம் ஆண்டு இளங்கலை வணிகவியல் துறை மாணவர் ஜெயபாலாஜி கலந்து கொண்டார். 
இதில் 16 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் 500 மீட்டர் மற்றும் 1000 மீட்டர் ரேஸ்  ஆகிய இரு போட்டியில்   கலந்து கொண்ட ஜெயபாலாஜி முதலிடத்தில் வெற்றி பெற்று இரு தக்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். 
  இந்நிலையில் மாணவர் ஜெயபாலாஜிக்கு, அக்கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளரும் செயலருமான எம்.தர்வேஷ் முகைதீன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஹெச்.முகமது மீரான் முன்னிலை விகித்தார். விழாவில், கலந்துகொண்டவர்கள் தங்கப் பதக்கம் வென்ற மாணவரை பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 
முன்னதாக கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலி வரவேற்றார். கல்லூரி நிர்வாக்குழு உறுப்பினர் முகமது மீரான், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT