தேனி

கம்பம் பகுதியில் அரசு சட்டக்கல்லூரி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

23rd Aug 2019 08:25 AM

ADVERTISEMENT

கம்பம் பகுதியில் அரசு சட்டக் கல்லூரியை அமைக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த பல ஆண்டுகளாக ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளிலும், கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.  
ஆனால் கம்பம் சட்டப்பேரவை தொகுதி மற்ற தொகுதிகளைக் காட்டிலும், வளர்ச்சி திட்டங்களில்  மிகவும் பின்தங்கியுள்ளது.
குறிப்பாக கம்பம் சட்டப்பேரவை தொகுதியில் அரசு கல்லூரி இல்லை. இதனால் இப்பகுதி, ஏழை மாணவ, மாணவியரிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை. 
மேலும் போடி தாலுகாவில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் 8 உள்ளன. தேனி தாலுகாவில் 6, பெரியகுளம் தாலுகாவில் 10, ஆண்டிபட்டி தாலுகாவில் 4, தவிர உத்தமபாளையம் தாலுகாவில் 4 தனியார் கல்லூரிகள் மட்டுமே உள்ளன.
எனவே போடி பகுதியில் அமைய உள்ள அரசு சட்டக்கல்லூரியை கம்பம் பகுதியில் அமைக்கும் போது பார்கவுன்சில் விதிமுறைகளுக்கேற்ப உத்தமபாளையத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் உள்ளன என்பது குறிப்பபிடத்தக்கது. 
அனைத்து சட்ட விதிமுறைகள் சாதகமாக இருப்பதால், கம்பம் பகுதியில் அரசு சட்டக்கல்லூரி அமைக்க தமிழக முதல்வர், துணை முதல்வர், சட்டத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 
மேலும் இது தொடர்பாக பொதுமக்கள் சார்பாக சமூக ஆர்வலரும், வழக்குரைஞருமான பி.பிரகாஷ் கோரிக்கை மனுக்களையும் அனுப்பி உள்ளார்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT