தேனி

கம்பம் சின்ன வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

23rd Aug 2019 08:21 AM

ADVERTISEMENT

கம்பத்திற்கு 3 குளங்களுக்கு தண்ணீர் தரும் வரத்து கால்வாயான  சின்னவாய்க்காலை தூர்வார விவசாயிகள் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
கடந்த சில வாரங்களாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால்,  அணையின் நீர்மட்டம், உயர்ந்து வருகிறது. வியாழக்கிழமை நிலவரப்படி நீர்மட்டம் 129.85 கன அடியாக ஆக இருந்தது. இதையடுத்து விவசாயிகள் முதல்போக சாகுபடி இல்லாததால், இரண்டாம் போக சாகுபடிக்கு  நாற்றாங்கால் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
பாசனத்திற்காக அணையில் இருந்து  தண்ணீர் திறந்து விடப்படும் சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் வீரப்பநாயக்கன், உடப்படி, ஒட்டு ஆகிய மூன்று குளங்களுக்கு தண்ணீர் வரத்து தரக்கூடிய சின்னவாய்க்கால் பாதையில், புதர் செடி, கொடிகள் வளர்ந்தும், மண் திட்டுகள், கழிவு மற்றும் நெகிழிப் பைகள் நிறைந்ததாகவும் உள்ளது.
 இதனால் ஆற்றில் இருந்து  தண்ணீர் திறந்து விடப்படும் போது குளத்திற்கு தண்ணீர் செல்லமுடியாத நிலை ஏற்படும். 
தண்ணீர் திறப்பதற்கு முன் சின்னவாய்க்காலை, தூர்வாரினால், பாசனத்தண்ணீர் விரயமாகாமல் கிடைக்கும். இதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT