தேனி

கடமலைக்குண்டு பகுதியில் சட்டவிரோத மது விற்பனை: 5 பேர் கைது

23rd Aug 2019 08:25 AM

ADVERTISEMENT

கடமலைக்குண்டு பகுதியில் வியாழக்கிழமை போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு காவல் நிலைய சார்பு- ஆய்வாளர் அருண்பாண்டி தலைமையில் போலீஸார் சுற்றுவட்டார கிராமங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது கடலைக்குண்டு பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட சேர்மலை (45), சிவா(23), மூலக்கடையைச் சேர்ந்த ரமேஷ்(42), மந்திச்சுனை முருகன் (33), மணி (63) ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். 
அவர்களிடமிருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT