தேனி

பெண் காவலரை தாக்கியகணவர் கைது

11th Aug 2019 01:30 AM

ADVERTISEMENT


திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே பெண் காவலரை தாக்கிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
கன்னிவாடி அடுத்துள்ள மாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (29). இவர் செம்பட்டி காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார். 
இந்நிலையில் வெள்ளிக்கிழமை தனது குழந்தைகளுக்கு கையில் காப்புக்கட்டி உள்ளார். அதற்கு கணவர் முருகேசன் எதிர்ப்பு தெரிவித்து  தகராறு செய்து மணியை தாக்கியுள்ளார். இது குறித்து பெண் காவலர் மணி கன்னிவாடி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் முருகேசனை கைது செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT