தேனி

பால் வியாபாரிக்கு கொலை மிரட்டல்: இளைஞர் கைது

11th Aug 2019 01:30 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பத்தில் பால் வியாபாரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கம்பம் கெஞ்சயன்குளத்தை சேர்ந்த முருகன் மகன் விக்னேஷ் (25). பால்வியாபாரியான இவர், தாத்தப்பன்குளம் இரண்டாவது தெருவில் உள்ள சோட்டாணிக்கரை பகவதியம்மன் கோயில் அருகே சனிக்கிழமை காலை பால் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது தாத்தப்பன்குளம் 13 ஆவது தெருவைச் சேர்ந்த அல்லாபிச்சை மகன் பீர்முகமது (34), என்பவர் விக்னேஷை  கன்னத்தில் அறைந்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து விக்னேஷ் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சார்பு-ஆய்வாளர் 
என்.பவுன்ராஜ் வழக்குப் பதிவு செய்து பீர்முகமதுவை கைது செய்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT