தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம், ஜல் சக்தி அபியான் இயக்கம், திடக் கழிவு மேலாண்மைத் திட்டம், முழு சுகாதார இயக்கத் திட்டம், நெகிழி ஒழிப்பு, பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு போட்டி நடத்துதல், டெங்கு தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பொருள்கள் குறித்து ஆலோசனை நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
எனவே, ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் வாக்குரிமை உள்ள அனைவரும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.