தேனி

கம்பத்தில் தொடர் மழை: 2 வீடுகளில் சுவர் இடிந்து சேதம்

11th Aug 2019 01:30 AM

ADVERTISEMENT


தேனி மாவட்டத்தில் பலத்த காற்று மற்றும் தொடர் மழையால் குச்சனூர், கம்பம் ஆகிய இடங்களில் இரு வீடுகளில் சுவர் இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் பெய்து வரும் மழையால் குச்சனூர், கம்பத்தில் தாத்தப்பன்குளம் ஆகிய இடங்களில் இரு வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. 
தேனி, ராசிங்காபுரம், மார்க்கையன்கோட்டை, காமயகவுண்டன்பட்டி, கோம்பை, உத்தமபாளையம், தோப்புபட்டி ஆகிய ஊர்களில் 16 இடங்களில் மரங்கள் ஒடிந்து விழுந்தன. 15 இடங்களில் மின் கம்பங்களும், 3 இடங்களில் மின் மாற்றிகளும் சேதமடைந்தன.
சேதமடைந்த மின் கம்பம் மற்றும் மின் மாற்றிகள் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், சாலையில் ஒடிந்து விழுந்த மரங்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாகவும் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் கூறினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT