கம்பத்தில் உலக புத்தக நாள் விழா

தேனி மாவட்டம் கம்பத்தில் உலக புத்தக நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பத்தில் உலக புத்தக நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பாரதி தமிழ் இலக்கியப்பேரவை மற்றும் நூலக வாசகர் வட்டம் சார்பில் முக்தி விநாயகர் ஆரம்ப பள்ளியில் இவ்விழா நடைபெற்றது. இதில் எம்.எஸ்.எஸ்.காந்தவாசன் தலைமை வகித்தார். முகமது ரபீக், கவிஞர் பஞ்சுராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
பேராசிரியர் மு.அப்துல் சமது எழுதிய ஒரு குச்சி, ஒரு வானம், பஞ்சுராஜா எழுதிய பெண்ணுரிமைகளும், வன்முறைகளும் ஆகிய நூல்களை பொன்.காட்சிக்கண்ணன் வெளியிட, எஸ்.சந்திரசேகர், அ.அலீம், ஆகியோர் 
பெற்றுக்கொண்டனர். நூலை அறிமுகம் செய்து கவிஞர் பாரதன் பேசினார். 
கவியரங்கத்திற்கு அ.அரவரசன் தலைமை வகித்தார். புத்தகங்கள் எனும் பொதுத்தலைப்பில், வியப்பு குறிகள் பற்றி பேராசிரியர் மு.அப்துல்காதர், வினாக்குறிகள் பற்றி சோமநாதபாரதி, வித்தக குறிகள் பற்றி இமானுவேல் ஆகியோர் பேசினர். நூலகர் மணிமுருகன் வரவேற்று பேசினார். ஏராளமான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com