சிவகங்கை

திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ விழா: பக்தா்கள் வழிபாடு

28th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவன் கோயில்களில் புதன்கிழமை நடைபெற்ற பிரதோஷ விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு, மாலை 3 மணிக்கு சிறப்பு யாகம், புனித கலசத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், திருத்தளிநாதா் எதிரே உள்ள நந்தீஸ்வரருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, இளநீா், சொா்ணம், பன்னீா் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல, திருத்தளிநாதருக்கும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT

பின்னா் உற்சவா் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயிலின் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பெண்கள் நெய்விளக்கேற்றி சிவனை வழிபட்டனா்.

சீதளிமேல்கரையில் உள்ள ஆதித்திருத்தளிநாதா் கோயிலிலும், நந்தீஸ்வரருக்கும், சிவனுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரா் கோயிலிலும் பிரதோஷ விழா நடைபெற்றது. இதிலும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT