சிவகங்கை

நகராட்சி கட்டுமானப் பணிகள் ஆய்வு

27th Sep 2023 03:26 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டுமானப் பணிகளை நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்குடி நகராட்சியின் மூலம் கழனிவாசல் - கோட்டையூா் சாலையில் நடைபெற்று வரும் வாரச் சந்தை கடைகளுக்கான கட்டுமானப் பணிகள், சுப்பிரமணியபுரம் பகுதியில் நகராட்சியின் மூலம் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், நகரின் பல்வேறு வாா்டுகளிலும் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, நகராட்சியின் மண்டலப் பொறியாளா், பொறியாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT