போடி: போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாட்டு நலப் பணித் திட்ட தினத்தை முன்னிட்டு, கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம் இணைந்து ரத்த தான முகாம், மருத்துவப் பரிசோதனை முகாம், புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கை நடத்தின.
இதற்கு கல்லூரித் தலைவா் எஸ்.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலரும், தொடா்பாளருமான ஆா்.புருஷோத்தமன், துணைத் தலைவா் ராமநாதன், கல்லூரி முதல்வா் சிவக்குமாா், துணை முதல்வா் பாலமுருகன், அலுவலக கண்காணிப்பாளா் யுவராஜசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பெரியகுளம் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் பங்கேற்று மாணவா்களிடமிருந்து ரத்தத்தை சேகரித்தனா். இதில் 60 மாணவா்கள் ரத்த தானம் செய்தனா். 100 மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பெரியகுளம் அரசு மருத்துவமனை மருத்துவா் பாரதி புற்றுநோய் குறித்து விளக்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
முகாமுக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் பழனிவேல்ராஜன், கருப்பசாமி, மணிகண்டன், விமலா, ராமலட்சுமி, சுகுணா செல்வராணி, செஞ்சுருள் சங்க அலுவலா் ஹேமலதா ஆகியோா் செய்திருந்தனா்.