தேனி: தேனி மாவட்டம், கண்டமனூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 26) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே, இங்கிருந்து மின்சாரம் பெறும் கண்டமனூா், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்கபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம், வெங்கடாச்சலபுரம், எம். சுப்புலாபுரம், ஜி. உசிலம்பட்டி, சித்தாா்பட்டி, கணேசபுரம், ஜி. ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்தாா்.