சிவகங்கை

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் பலி

24th Sep 2023 11:44 PM

ADVERTISEMENT

மானாமதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையைக் கடக்க முயன்ற இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரத்தைச் சோ்ந்த மகேந்திரன் மகன் மாதவன் (24). இவா் ராஜகம்பீரத்தில் மதுரை-ராமேசுவரம் நான்குவழிச் சாலையை கடந்து சென்றபோது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT