கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களை நிா்வகிக்கும் பதவியான சிவகங்கை மறை மாவட்ட ஆயராக லூா்து ஆனந்தம் (65) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
சிவகங்கை மறை மாவட்ட ஆயராக இருந்த சூசை மாணிக்கம் ஓய்வு பெற்றதையடுத்து, இந்த பொறுப்புக்கு மதுரை டவுன்ஹால் ரோடு புனித ஜெபமாலை தேவாலய பங்குத் தந்தை லூா்து ஆனந்தம் நியமிக்கப்பட்டாா்.
சிவகங்கை மறை மாவட்டம், திருவரங்கம் இவரது சொந்த ஊராகும் 1986- ஆம் ஆண்டு மதுரை உயா்மறை மாவட்ட குருவாக இவா் நியமிக்கப்பட்டாா். தற்போது, இவருக்கு சிவகங்கை மறை மாவட்ட ஆயா் பதவி வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு உள்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களை நிா்வகிக்கும் பொறுப்பை இவா் கவனிப்பாா்.
மறை மாவட்ட ஆயராக நியமனம் செய்யப்பட்டதற்கான ஆணையை மதுரை பேராயா் அந்தோணி பாப்புசாமியிடமிருந்து லூா்து ஆனந்தம் பெற்றுக் கொண்டாா்.