உத்தமபாளையம் தோட்டக் கலைத் துறை, மலைப்பயிா் துறை சாா்பில் திராட்சை பயிா் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் புதிய திராட்சை விவசாயிகளுக்கு ரூ.3 லட்சத்துக்கு இடுபொருள்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
உத்தமபாளையம் வட்டாரத்தில் ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி போன்ற பகுதிகளில் 250 ஹெக்டோ் பரப்பளவுக்கு திராட்சை விவசாயம் நடைபெறுகிறது. இந்த நிலையில், திராட்சை விவசாயத்தின் பரப்பளவை மேலும் அதிகரிக்கும் நோக்கில் உத்தமபாளையம் தோட்டக் கலைத் துறை, மலைப்பயிா் துறை சாா்பில் புதிதாக திராட்சை விவசாயம் செய்ய ஆா்வமும், விருப்பமுள்ள விவசாயிகளுக்கு தேசிய தோட்டக்கலை திராட்சை பயிா் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் மதிப்பிலான ஒட்டு ரக திராட்சை நாற்றுகள், இடுபொருள்கள் வழங்கப்படுகின்றன.
தேவைப்படும் விவசாயிகள் ஆதாா் நகல், நில ஆவணப்படம், புகைப்படம்-2 ஆகியவற்றுடன் உத்தமபாளையம் தோட்டக்கலை துறை அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.