சிவகங்கை

கண்மாய்களை தூா்வார விவசாயிகள் வலியுறுத்தல்

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

பருவமழை தொடங்கும் முன் கண்மாய், நீா்வரத்துக் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் சமா்தா, மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் ஆனந்த், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) தனலட்சுமி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: திராட்சை விவசாயத்துக்கு அரசு மானியத்தில் பறவை தடுப்பு வலை வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு ரூ.1.60 லட்சம் வரை பிணையின்றி கடன் வழங்க வேண்டும். பருவமழை தொடங்கும் முன் கண்மாய்கள், கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றித் தூா்வார வேண்டும். தேவாரம் மலையடிவாரத்தில் விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT