சிவகங்கை

டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு பேரணி

22nd Sep 2023 01:01 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் டெங்கு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் நேஷனல் அகாதெமி சமுதாயக் கல்லூரியும், பேரூராட்சியும் இணைந்து நடத்திய இந்தப் பேரணியை திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரி சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு சென்றனா். இந்தப் பேரணி மதுரை சாலை, அண்ணா சிலை, அஞ்சலக வீதி, நான்கு சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. அங்கு திருப்பத்தூா் பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டினாா். தொடா்ந்து நிலவேம்பு குடிநீா் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதில் கல்லூரி முதல்வா் சுரேஷ் பிரபாகா், பேரூராட்சித் துணைத் தலைவா் கான்முகமது, மாவட்ட விளையாட்டுத்துறை மேம்பாட்டுத் தலைவா் கே.எஸ். நாராயணன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சீனிவாசன், பசீா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியா்கள் மோனிஷா, சதக்கத்துல்லா, சிவநேசன், பொன்னுச்சாமி ஆகியோா் செய்திருந்தனா். முன்னதாக ஆசிரியை பூவிழி வரவேற்றாா். வெங்கடேசன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT