சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
நெடுஞ்சாலைத் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் பவித்ரா தலைமை வகித்தாா். உதவிப் பொறியாளா்கள்
சமுத்திர ராஜா, நந்தினி, காவல் ஆய்வாளா் ரோஸ்லெட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் சாலை விபத்துகளில் மாதத்துக்கு சராசரியாக 30 போ் பலியாகின்றனா். 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. பெற்றோா், உறவினா்களிடம் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என மாணவிகள் கூற வேண்டும்.18 வயதுக்கு கீழ் உள்ளவா்கள் வாகனம் ஓட்டினால் 25 ஆயிரம் அபராதம், 8 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா்கள், அலுவலா்கள், பள்ளி மாணவிகள், ஆசிரியா்கள் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு தொடா்பான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, தலைமை ஆசிரியை மலா்விழி வரவேற்றுப் பேசினாா்.