சிவகங்கை

காரைக்குடியில் தேவா் சிலைக்கு பாலபிஷேகம்

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தேவா் உருவச் சிலைக்கு வியாழக்கிழமை பெண்கள் பாலபிஷேகம் செய்தனா்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா வருகிற 30-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தேவா் உருவச் சிலைக்கு பெண்கள் பாலபிஷேகம் செய்தும், தேங்காய்களை உடைத்தும் வழிபாடு நடத்தினா்.

முன்னதாக, விநாயகா் கோயிலிருந்து புறப்பட்ட பால்குட ஊா்வலத்தை தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் நிறுவனா் திருமாறன்ஜி, மாநிலச் செயலாளா் சுமதி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT