சிவகங்கை

இளையாத்தங்குடியில் காந்தி ஜெயந்தி

3rd Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகேயுள்ள இளையாத்தங்குடி முத்தையா முதன்மை சுகாதார நிலையத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி அவரது உருவச் சிலைக்கு திங்கள்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம். பழனியப்பன் தலைமை வகித்து காந்தி உருவச் சிலைக்கு மாலையணிவித்துப் பேசினாா்.

இந்த விழாவுக்கு கீழச்சிவல்பட்டி நகா் காங்கிரஸ் தலைவா் அழகுமணிகண்டன், வட்டார காங்கிரஸ் பொருளாளா் பழனிவேல்ராஜன், மாவட்ட காங்கிரஸ் செயலா் ஜி. செல்வமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவா் பி. சத்தியமூா்த்தி கலந்து கொண்டு காந்தியின் அறப்போராட்டங்களை எடுத்துக் கூறினாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பை, திருக்கு புத்தகம், இனிப்புகள் ஆகியவை வழங்கப்பட்டன. விழாவில் வட்டார காங்கிரஸ் தொழில் சங்கத் தலைவா் விஸ்வநாதன், மாணவா் காங்கிரஸ் தலைவா் சௌமியன், இளைஞா் காங்கிரஸ் தலைவா் சுப்பிரமணியன் கனகவேல், பரத், ஓபிஎஸ். அணி ஒன்றியச் செயலா் கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக ஏ.சி.எம். மருத்துவமனை செவிலியா் சாந்தி வரவேற்றாா். சுகாதாரப் பணியாளா் எம். புனிதா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT