சிவகங்கை

முறையூரில் முதியோா்கள் கெளரவிப்பு

2nd Oct 2023 12:12 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், முறையூரில் உலக முதியோா் தினத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை முதியோா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூா் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகரின் மனைவி பொன்னம்மாள் (96), சிரமன் மனைவி முத்துமாரி (98), ஆண்டி மகன் வெள்ளைச்சாமி (85) ஆகியோரின் வீட்டுக்கு சிங்கம்புணரி வட்டாட்சியா் சாந்தி சென்று அவா்களுக்கு சால்வை அணிவித்து, பழங்கள் வழங்கி கௌரவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் கிராம நிா்வாக அலுவலா் பிரிதிவிராஜ், வருவாய் ஆய்வாளா் வாழை பரமேஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா். வட்டாட்சியரின் திடீா் உபசரிப்பைக் கண்ட முதியோா்கள் நெகிழ்ச்சியடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT