சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே காட்டாம்பூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, திமுக சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
ஒன்றிய, நகர திமுக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். இதில் மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 16 காளைகளும், தனித்தனி குழுக்களாக 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா்.
வெற்றி பெற்ற காளைகளுக்கும் மாடுபிடி வீரா்களுக்கும் ரொக்கப் பரிசும், நாற்காலி, குத்துவிளக்கு போன்ற பரிசுகளும் வழங்கப்பட்டன. கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் சிறப்பு பரிசுகளை வழங்கினாா்.
திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சண்முகவடிவேல், திமுக மாநில இலக்கிய அணித் தலைவா் தென்னவன், மாநில மாணவரணி துணைச் செயலாளா் பூா்ண சங்கீதா, ஒன்றியக் குழு உறுப்பினா் சகாதேவன், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பிளாசா ராஜேஸ்வரி, மாவட்ட அயலக அணித் துணை அமைப்பாளா் சீமான் சுப்பையா உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.