சிவகங்கை

தற்கொலை முயற்சி: காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

31st May 2023 04:01 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள சாலைக்கிராமத்தில் காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சாலைக் கிராமத்தில் அனுமதி பெறாத மதுபானக் கூடங்களில் கள்ளச் சந்தையில் மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சாலைக்கிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரிட்டோ, சிவகங்கை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் உத்தரவிட்டாா். இதனால் மனமுடைந்த பிரிட்டோ சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் ஓய்வறையில், கடந்த 22-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.

அங்கிருந்த காவலா்கள் பிரிட்டோவை மீட்டு, தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் சிகிச்சை முடிந்து இவா் வீடு திரும்பினாா்.

இந்த நிலையில், ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவா் துரை, தற்கொலைக்கு முயன்ற உதவி ஆய்வாளா் பிரிட்டோவை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT