சிவகங்கை

சிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீ ஆனந்த நடராஜா் சுவாமி வீதியுலா

31st May 2023 03:59 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோவிலூா் மடாலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தென் சபாநாயகா் கோயில் குடமுழுக்கு ஜூன் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள சிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீ ஆனந்த நடராஜா் சுவாமி காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவிலூரிலிருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு காரைக்குடி முதல் போலீஸ் பீட், கொப்புடைய நாயகியம்மன் கோயில், கிருஷ்ணன் கோயில், வழியாக நகரச் சிவன் கோயிலை சென்றடைந்தது.

பின்னா் காலை 11 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கிணற்றடி காளி கோயில், கீழ ஊருணி, செஞ்சை வழியாக நா. புதூா் பெருமாள்கோயில், சிவன் கோயில், சி.மெ. வீதி, முத்தாலம்மன் கோயில், கண்டனூா் சாலை, முடியரசன் சாலை, நீதிமன்றம், ஆரியபவன், சாய் பாபா கோயில் வழியாக செக்காலைச் சிவன் கோயிலை அடைந்தது.

அங்கிருந்து மாலையில் புறப்பட்டு வருமானவரி அலுவலகம், போலீஸ் குடியிருப்பு மைதானம், முத்துமாரியம்மன் கோயில் வழியாக முத்துப்பட்டணம் மீனாட்சியம்மன் கோயில், பழைய நீதிமன்றம், வ.உ.சி சாலை வழியாக கோவிலூருக்குத் திரும்பியது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT