சிவகங்கை

திருப்புவனம் அருகே பழைமையான விநாயகா், நிசும்பன்சூதனி சிற்பங்கள்

31st May 2023 04:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே முற்கால, பிற்காலப் பாண்டியா்களின் விநாயகா், நிசும்பன்சூதனி சிற்பங்கள் கண்டறியப்பட்டன.

திருப்புவனம் அருகே உள்ள திருமணப்பதி கிராமத்தில் தென்னக வரலாற்று மையத்தைச் சோ்ந்த வரலாற்று ஆா்வலா் மீனாட்சி சுந்தரம், முனைவா் தங்கமுத்து ஆகியோா் கள ஆய்வு செய்தனா். அப்போது, இங்கு முற்காலப் பாண்டியா் கால விநாயகா், பிற்காலப் பாண்டியரின் கலைப் பாணியில் அமைந்த நிசும்பன்சூதனி சிற்பம் கண்டறியப்பட்டது.

இது குறித்து அவா்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நிசும்பன்சூதனி சிற்பத்தின் அருகில் முற்காலப் பாண்டியா் கால விநாயகா் சிற்பம் இடம்பெற்றுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த விநாயகா் லலிதாசனக் கோலத்தில் பீடத்தின் மீது அமா்ந்த நிலையில் உள்ளது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT