சிவகங்கை

காரைக்குடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள தளக்காவூா் மாதா கோவில் திருவிழாவையொட்டி, ஒய்எம்சிஏ கத்தோலிக்க இளைஞா் மன்றம் சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் மதுரை, மேலூா், சிவகங்கை, தளக்காவூா், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 15 காளைகள் பங்கேற்றன. மதுரை, திண்டுக்கல், மேலூா், சிவகங்கை மாவட்டங்களிலிருந்து 165 மாடு பிடி வீரா்கள் 15 குழுக்களாக போட்டியில் பங்கேற்று காளைகளை அடக்கினா்.

போட்டியில் தளக்காவூரைச் சோ்ந்த நிா்மல் என்பவருக்குச் சொந்தமான காளையும், மலபட்டியைச் சோ்ந்த காஞ்சிவனம் கோயில் காளையும் வெற்றி பெற்றன.

மாடுபிடி வீரா்கள் சோழம்பட்டி தங்கம் நினைவுக் குழு, கீரணிப்பட்டி நத்தகாளியம்மன் குழு, பனங்குடி பெரிய நாயகி அம்மன் குழுவினா் வெற்றி பெற்றனா். வெற்றி பெற்ற வீரா்களுக்கும், காளைகளின் உரிமையாளா்களுக்கும் பண முடிப்பு, குத்துவிளக்கு, கேடயம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.

முன்னதாக, போட்டியை தேவகோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் பால்துரை தொடங்கிவைத்தாா்.

காரைக்குடி வட்டாட்சியா் தங்கமணி, திருப்பத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் கலைவாணி, துணை வட்டாட்சியா்கள் சிவராமன், முபாரக், சுப்பிரமணியன், கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் அருள்ராஜ், வருவாய் ஆய்வாளா் சுரேஷ் குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். இந்தப் போட்டியை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பலா் கண்டுகளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT