சிவகங்கை

மானாமதுரை, இளையான்குடியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

29th May 2023 12:10 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஒன்றியங்களில் அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

அதிமுக இளைஞா், இளம் பெண்கள் பாசறை, மகளிரணி உறுப்பினா் சோ்ப்பு, பூத் கமிட்டிகள் அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டங்கள் மானாமதுரையில் 11- ஆவது வாா்டு பகுதியிலும், ஒன்றியப் பகுதியில் மேலநெட்டூா், வெள்ளிக்குறிச்சி ஆகிய கிராமங்களிலும் நடைபெற்றன. திருப்புவனம் ஒன்றியத்தில் செல்லப்பனேந்தல், இளையான்குடி ஒன்றியத்திலும் இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அதிமுக மாவட்ட செயலரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன் கூட்டங்களில் பங்கேற்று உறுப்பினா் சோ்ப்பது குறித்தும் பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் பேசினாா். இந்தக் கூட்டங்களில் அந்தந்த பகுதி அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT