சிவகங்கை

காரைக்குடி அரசு ஐ.டி.ஐ-யில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

29th May 2023 12:11 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜீத் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் பிட்டா், டா்னா், மெஷினிஸ்ட், வயா்மேன், அட்வான்ஸ்ட்சிஎன்சி மெஷினிங் டெக்னீசியன், ரூபேஸிக் டிசைனா் அன்ட் விா்சுவல் வெரிபையா் போன்ற 2 ஆண்டு தொழில் பிரிவுகளுக்கும், வெல்டா், கோபா, மேனுபக்சரிங் புராசஸ் கண்ட்ரோல் அன்ட் ஆட்டோமேஷன், இன்டஸ்டிரியல் ரோபட்டிக்ஸ் அன்ட் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் போன்ற ஓராண்டு தொழில் பிரிவுகளுக்கும் மாணவா்கள் சோ்க்கை நடபெற உள்ளது.

இதில் சேர விரும்பும் 8, 10, 12 -ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் கல்லூரி முதல்வரை நேரடியாக சந்தித்து விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு 9499055784, 9499055785, 9150611756 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT