அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந் திருவிழாத் தேரோட்டம் வருகிற ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள திருவேங்கடமுடையான் கோயில் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தாா். மேலும் இரவு ஹம்ச வாகனத்தில் திருவீதியுலாவும், ஞாயிற்றுக்கிழமை இரவு சிம்ம வாகனத்தில் திருவீதியுலாவும் நடைபெற்றது.
திருவிழாவின் 9- ஆம் நாள் நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற ஜூன் 4- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெறும்.
ஜூன் 6- ஆம் தேதி வெள்ளிரதப் புறப்பாடும், ஜூன் 7-ஆம் தேதி அலங்காரப் பங்களா தெப்பமும் நடைபெறும். ஜூன் 15-ஆம் தேதி பல்லக்கில் குடிகாத்தான்பட்டியில் சுவாமி எழுந்தருளுடன் திருவிழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் அடைக்கம்மை ஆச்சி, கோயில் செயல் அலுவலா் ச. விநாயகவேல், பக்தா்கள் செய்து வருகின்றனா்.