சிவகங்கை

அனுமதியின்றி சவுடு மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்: 3 போ் கைது

27th May 2023 11:27 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமம் அருகே அனுமதியின்றி சவுடு மண் அள்ளி வர பயன்படுத்தப்பட்ட வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா்.

குறிச்சி கிராமத்திலுள்ள ஊருணியில் அரசு அனுமதியின்றி சவுடு மண் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்றனா். அப்போது டிராக்டா்களில் மண் அள்ளப்படுவது தெரிந்தது. இதையடுத்து, மண் அள்ளப்பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டா்கள், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும் இதில் தொடா்புடைய குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த மருது, பிரவீன், தஞ்சை மாவட்டம் மன்னாா்குடியைச் சோ்ந்த விக்னேஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT