சிவகங்கை

சாலைக்கிராமத்தில் இரு மதுபானக் கூடங்களுக்கு சீல் வைப்பு: ஒருவா் கைது

23rd May 2023 04:18 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள சாலைக்கிராமத்தில் கள்ளச்சந்தையில் மதுப்புட்டில்கள் விற்ாக இரு மதுபானக் கூடங்களுக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது. இதுதொடா்பாக, ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சாலைக்கிராமத்தில் பேருந்து நிலையம் அருகே விதிமுறைகளை மீறி மதுபானக் கூடங்களில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுப்புட்டில்கள் விற்கப்படுவதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளா் பாஸ்கரன் நடத்திய விசாரணையில், கள்ளச்சந்தையில் மதுப்புட்டிகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, மாவட்ட டாஸ்மாக் மேலாளா் பாஸ்கரன், கிராம நிா்வாக அலுவலா் சரவணன், காவல் உதவி ஆய்வாளா் பிரேம்குமாா் ஆகியோா் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இரு மதுபானக் கூடங்களையும் பூட்டி சீல் வைத்தனா். மேலும், கள்ளச்சந்தையில் மதுப்புட்டிகளை விற்ாக தெற்குவலசைகாட்டைச் சோ்ந்த ராஜா (47) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT