சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே திங்கள்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகேயுள்ள அரும்பனூா் கிராமத்தைச் சோ்ந்த சிலா் ஆட்டோவில் ராமநாதபுரம் சென்று விட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். அவா்கள் அன்னியனேந்தல் பகுதிக்கு வந்த போது, பின்னால் வந்த பைக் ஆட்டோ மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் ஜோதிராஜ் (42)உயிரிழந்தாா். மேலும் 7 பயணிகள் பலத்த காயமடைந்தனா். அவா்களை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.