சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் அழகப்பா திறன் மேம்பாட்டு மைய மென்பொருள் மேம்பாட்டு மாணவா்களுக்கு, இடைமுக வடிமைப்பு குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் (பொறுப்பு) சு.ராஜமோகன் தலைமை வகித்தாா். உயிரி தொழில்நுட்பத் துறைத் தலைவா் கே. பாலமுருகன் தொடக்க உரையாற்றினாா். சென்னை நேஷனல் ஸ்டாக் எக்சேன்ச் இன்பா்மேசன் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தின் மூத்த யுஎக்ஸ் வடிவமைப்பாளா் கந்தசாமி கிருஷ்ணன் இடைமுக வடிவமைப்பின் முக்கிய அம்சங்கள் குறித்துப் பேசினாா்.
முன்னதாக, அழகப்பா திறன் மேம்பாட்டு மைய இயக்குநா் சி.கே. முத்துக்குமரன் வரவேற்றாா். அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் கலைப்புல முதன்மையா் கே.ஆா். முருகன் நன்றி கூறினாா்.