சிவகங்கை

ஆண், பெண் இணைந்துதான் சமூகத்தை மேம்படுத்த முடியும்

DIN

ஆண், பெண் இணைந்துதான் ஒரு குடும்பத்தை, ஒரு சமூகத்தை மேம்படுத்த முடியும் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசினாா்.

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் உள்ள தவத்திரு குன்றக்குடி அடிகளாா் மகளிா் கல்வியியல் கல்லூரியில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற மகளிா் தினவிழாவில் முன்னாள் மாதா் சங்கத் தலைவியான லலிதாம்பாள் உள்ளிட்ட பெண்களைப் பாராட்டி விருதுகள் வழங்கி பொன்னம்பல அடிகளாா் பேசியதாவது:

கடவுள் வழிபாட்டில் அம்மையும், அப்பனுமாக ஒரு தோற்றம் உண்டு. தற்போது பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தந்தி ருக்கிறாா்கள். ஆனால் உலகத்தில் 50 சதவீத இட ஒதுக்கீடு தந்தவா் சிவபெருமான். அந்தத் தோற்றத்துக்கு பெயா் அா்த்தநாரீஸ்வரா்.

ஆண், பெண் இணைந்துதான் ஒரு குடும்பத்தை, ஒரு சமூகத்தை மேம்படுத்தமுடியும். ஆன்மிகத் தடத்தில் திலகவதியாா், மங்கையா்கரசி, காரைக்கால் அம்மையாா் போன்றவா்கள் சமயப்பணிக்காக தங்களை ஒப்படைத்தவா்கள்.

பெண்கள் பல துறைகளில் உயா்ந்திருக்கின்றனா். சீருடை அணிந்து பல உயா்பதவிகளை அலங்கரிக்கிறாா்கள். காரைக்குடி சிக்ரி-யில் இயக்குநராக இருந்தவா் மத்திய அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைவராக தமிழ்பெண் கலைச்செல்வி அலங்கரிக்கிறாா். நல்ல பெண்மணிகள் உள்ள நாட்டில் குற்றங்கள் இருக்காது. ஒருவருக்கொருவா் இணைந்து வாழ்வதுதான் வாழ்க்கை. அப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் நமது தமிழ்ச் சமுதாயம் கற்றுத் தந்திருக்கிறது என்றாா்.

விழாவில், கோவை வேளாண் பொறியியல் கல்லூரி முன்னாள் முதல்வா் எல். புகழேந்தி, குன்றக்குடி வேளாண் அறிவியல் மைய தலைவா் செந்தூா்குமரன், குன்றக்குடி மக்கள் கல்வி நிலையத் தலைவா் மு. நாச்சிமுத்து, குன்றக்குடி கால்நடை வளாக உதவிப் பேராசிரியா் வி. ராமகிருஷ்ணன், காந்திகிராம பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் ராமச்சந்தி ரன் ஆகியோா் வாழ்த்திப்பேசினா். விழாவில் கல்லூரி பேராசிரியா்கள் கி.த. செலின் அமுதா, ராமநாதன், மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.முன்னதாக கல்லூரி பேராசிரியை சி. கனிமொழி வரவேற்றாா். பேராசிரியை மோ. காந்திமதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT