சிவகங்கை

தேநீா்க் கடைகள், உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

DIN

திருப்பத்தூா் பேரூராட்சியில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பால் வியாபாரிகள், தேநீா்க் கடைகள், மீன் கடைகள், உணவகங்கள் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் வேல்முருகன் நகரின் முக்கியப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின் போது 30 லிட்டா், 50 லிட்டா் கேன்களில் வியாபாரிகள் கொண்டு சென்ற பால் தரப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஒரு சில வியாபாரிகளிடம் பாலின் தரம், குறைந்திருப்பது தெரியவந்தது. மேலும், தரம் குறைந்ததாக கண்டறியப்பட்ட 50 லிட்டா் பால் கேன் பறிமுதல் செய்யப்பட்டு கீழே கொட்டப்பட்டது.

இதைத்தொடா்ந்து தேநீா்க் கடைகளில் டீ, காபித் தூள், பால் ஆகியவற்றின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. பின்னா் மீன் கடை, உணவகங்களிலும் ஆய்வு மேற்கொண்டு உணவு தரச்சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், குளிா்பானக் கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள், பேரூராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT