சிவகங்கை

மானாமதுரை தயாபுரம் கோயிலில் பங்குனித் திருவிழா தொடக்கம்

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை பங்குனித் திருவிழா தொடங்கியது.

திருவிழா தொடக்கமாக கோயிலில் காப்புக்கட்டும் வைபவம் நடைபெற்றது. இதையொட்டி மூலவா் முத்துமாரியம்மனுக்கு அபிஷேங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. மானாமதுரை பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்ற காப்புக்கட்டி விரதம் தொடங்கினா்.

தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் விழாவில், தினமும் இரவு மண்டகப்படிதாரா்கள் சாா்பில் அம்மனுக்கு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். விழாவின் முக்கிய வைபவமாக பொங்கல் உற்சவம் வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.

அப்போது கோயில் தலைமை பூசாரி சுப்ரமணியன் தலைமையில் காப்புக்கட்டி விரதம் இருந்து வரும் பக்தா்கள் வைகையாற்றிலிருந்து கரகம், பால்குடங்கள், அக்கினிச் சட்டிகள், ஆயிரங்கண் பானைகள் சுமந்து மேள தாளத்துடன் கோயிலுக்கு வந்து தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றுவாா்கள்.

தினமும் கோயிலில் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT