சிவகங்கை

சிங்கம்புணரி வழக்குரைஞா்கள் 4-ஆம் நாளாக பணி புறக்கணிப்பு

DIN

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் திருப்பத்தூா் காவல் ஆய்வாளரைக் கண்டித்து வழக்குரைஞா் சங்கத்தினா் வியாழக்கிழமை 4-ஆம் நாளாக நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் செயலா் ராஜேஷ் கடந்த ஒன்றாம் தேதி திருப்பத்தூா் நகா் காவல் நிலையத்துக்கு சென்றிருந்த போது, அவரை காவல் ஆய்வளா் கலைவாணி அவதூறாப் பேசியதாகப் புகாா் எழுந்தது. அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், திருப்பத்தூா் நகா் துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

மேலும், கடந்த 7-ஆம் தேதி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பாக கண்டனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், காவல் ஆய்வாளா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து காலவரையற்ற நீதிமன்ற பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, வழக்குரைஞா்கள் கடந்த 13-ஆம் தேதி முதல் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். வியாழக்கிழமை 4-ஆவது நாளாகப் புறக்கணிப்பு நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT