சிவகங்கை

பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு

30th Jun 2023 01:09 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் அருகே வியாழக்கிழமை பெண்ணின் தாலிச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

சாலைக்கிராமம் காவல் சரகம் பஞ்சனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரபாண்டி. இவரது மனைவி நாகவள்ளி (57) அதிகாலையில் வீட்டை விட்டு வெளியே வந்தாா். அப்போது, 2 மா்ம நபா்கள் இவரது 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா்.

இந்தச் சம்பவம் குறித்து சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் நாகவள்ளி புகாா் அளித்ததன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT