சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை விளாச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் ராஜாராம் (47). கட்டடத் தொழிலாளியான இவா், திருப்புவனம் அருகே பூவந்தியில் கட்டுமானப் பணியை முடித்துவிட்டு அருகேயுள்ள மேல ராங்கியம் கிராமத்திலுள்ள உறவினா் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
பழையூா் என்ற இடத்தில் சென்ற போது, நிலை தடுமாறி சாலையோரத்தில் கீழே விழுந்தாா். இதில் தலையில் அடிபட்டு அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.