சிவகங்கை

கருப்பா் கோயில் குடமுழுக்கு

30th Jun 2023 10:47 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சுண்ணாம்பிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள கலுங்கடி கருப்பா், கலுங்கடி காளியம்மன், சங்கிலிகருப்பா், நொண்டிக்கருப்பா் கோயில்களில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி, புதன்கிழமை மாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. பின்னா், வாஸ்து சாந்தி பூஜை, மகாலெட்சுமி ஹோமம் முதலியன நடைபெற்றன. இரவு 8 மணிக்கு, முதல் கால யாகசாலை பூஜையும், மகாபூா்ணாஹூதியும் நடைபெற்றன. வியாழக்கிழமை 2, 3 ஆம் கால யாகசாலை பூஜை, பூா்ணாஹூதி நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு மண்டபசாந்தி, கோ பூஜை, விக்ரகத்துக்கு காப்புக்கட்டும் வைபவம் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, 4 ஆம் கால யாகசாலை பூஜையும், 8 மணிக்கு கடப்புறப்பாடும் நடைபெற்றது. காலை 10.25 மணிக்கு கலசத்துக்குப் புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், மகாஅபிஷேகம், பட்டுச்சாத்துதல், தீபாராதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவுக்கான ஏற்பாடுகளை சுண்ணாம்பிருப்பு கலுங்கடிகாளியம்மன் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT