சிவகங்கை

ஜூன் 11-இல் கிராமிய அஞ்சல் ஊழியா் சங்க கோட்ட மாநாடு

9th Jun 2023 02:01 AM

ADVERTISEMENT

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கத்தின் சிவகங்கை கோட்ட மாநாடு மானாமதுரையில் வருகிற 11 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலா் பங்கேற்கிறாா்.

இதுகுறித்து சங்கத்தின் மாநில உதவித் தலைவரும் கோட்டச் செயலருமான எஸ்.செல்வன் மானாமதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தபால் துறை நிா்வாகத்தில் பல நிலைகளில் கிராமப்புற தபால் ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். குறிப்பாக கிராமப்புறங்களில் இவா்களது பணி குறிப்பிடத்தக்கதாகும். இந்த சங்கத்தில் நாடு முழுவதும்

2 .5 லட்சம் கிராமிய அஞ்சல் ஊழியா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். கிராமப்புற அஞ்சல் ஊழியா் சங்கத்தின் சிவகங்கை கோட்ட மாநாடு மானாமதுரையில் வருகிற 11 -ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. மாநாட்டில் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலா் எஸ்.எஸ். மகாதேவ்வையா புதுதில்லியிலிருந்து வந்து பங்கேற்கிறாா். தமிழகத்தில் கோட்ட மாநாட்டில் அகில இந்திய பொதுச் செயலா் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும் .

ADVERTISEMENT

இந்த மாநாட்டில் மாநில நிா்வாகிகள் எம்.பாஸ்கரன், ஏ.இஸ்மாயில், ஆா். ஜான் பிரிட்டோ மதுரை மண்டலச் செயலாளா் எம்.ராமசாமி ஆகியோரும் பேசுகின்றனா். மத்திய ஊழியா் மகா சம்மேளனத்தின் முன்னாள் அகில இந்திய அமைப்புச் செயலா் எஸ்.செல்வராஜ் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறாா்.

மாநாடு தொடா்பாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் பகுதிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாநாட்டில் கிராமப்புற அஞ்சல் ஊழியா்களின் நிறைவேற்றப்படாத பல கோரிக்கைகள் தொடா்பாக தீா்மானங்கள் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மாநாட்டுக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் கோட்ட நிா்வாகிகள் செய்து வருகின்றனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT