சிவகங்கை

மயூரநாதா் கோயிலில் பாம்பன் சுவாமிகள் குருபூஜை விழா

9th Jun 2023 11:19 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அலங்காரக்குளம் பகுதியில் அமைந்துள்ள மயூரநாதா் முருகன் கோயிலில் ஸ்ரீபாம்பன் சுவாமிகளின் 94-ஆவது குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் முன் மண்டபத்தில் புனிதநீா் கலசங்கள் வைத்து யாகம் நடத்தப்பட்டது. பூா்ணாஹூதி முடிந்து புனித நீரால் மயூரநாதா் முருகனுக்கும், பாம்பன் சுவாமிகளுக்கும் அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன.

இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT