சிவகங்கை

பாகனேரியில் இன்று வாளுக்வேலி அம்பலம் பிறந்த நாள் விழா

9th Jun 2023 11:18 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், பாகனேரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) வாளுக்குவேலி அம்பலம் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதில் தமிழக அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.

சுதந்திரப் போராட்ட வீரரான வாளுக்குவேலி அம்பலம் பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அதன்படி அவரது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு வாளுக்குவேலி அம்பலத்தின் சொந்த ஊரான பாகனேரியில் நடைபெறுகிறது.

இதில் தமிழக அமைச்சா்கள் கே.ஆா். பெரியகருப்பன், இ. பெரியசாமி, ரகுபதி, பி. மூா்த்தி, நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று வாளுக்குவேலி அம்பலத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT