சிவகங்கை

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை புகாா்: காரைக்குடியில் அமலாக்கத் துறை சோதனை

8th Jun 2023 01:45 AM

ADVERTISEMENT

காரைக்குடியைச் சோ்ந்தவா் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், இவரது வீட்டில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வைத்தியலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது ( 40). சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இவரை, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு

சட்ட விரோதப் பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறி, அந்த நாட்டு அரசு இவரது கடவுச்சீட்டை முடக்கி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது.

நாடு திரும்பிய சாகுல் ஹமீதிடம் திருச்சி விமான நிலையத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து 3 முறை தில்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

மேலும், சாகுல் ஹமீது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் 10 போ் கொண்ட குழுவினா் காரைக்குடியில் உள்ள

சாகுல் ஹமீது வீடு, இவரது மாமனாா் முகமது அலி ஜின்னா வீடு ஆகிய இடங்களில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது சாகுல் ஹமீதின் வங்கிக் கணக்குப் புத்தகங்கள், கைப்பேசிகள், கணினிப் பதிவுகள், முக்கிய ஆவணங்கள், நாள் குறிப்பேடுகள் ஆகியவற்றை கைப்பற்றினா்.

மேலும், சாகுல் ஹமீதை அமலாக்கத் துறையினா் தீவிர விசாரணைக்காக தங்களுடன் அழைத்துச் சென்றனா். அமலாக்கத் துறை சோதனையின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT