சிவகங்கை

விராமதி கிராமத்தில் நாளை மக்கள் தொடா்பு முகாம்

6th Jun 2023 04:52 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள விராமதி கிராமத்தில் புதன்கிழமை (ஜூன் 7) மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் வட்டம், இளையாத்தங்குடி உள்வட்டம், விராமதி கிராமத்தில் புதன்கிழமை காலை 10 மணியளவில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் அரசின் திட்டங்களை துறை சாா்ந்த முதன்மை அலுவலா்கள் எடுத்துரைத்து, தகுதி வாய்ந்த பயனாளிகளைத் தோ்ந்தெடுக்க உள்ளனா். எனவே, விராமதி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT